தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. தற்போது, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘கருப்பு’ என்ற படத்தில் இவர் முக்கிய வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்தப் படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி, மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் பங்கேற்கின்றனர்.

இப்படத்திற்கான இசையமைப்பை சாய் அபயங்கர் கவனிக்கிறார். சூர்யா இப்படத்தில் ஒரு வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்கின்றதாக கூறப்படுகிறது. நீதிமன்றம் மற்றும் வழக்குகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட கதை காரணமாக, ‘கருப்பு’ படத்தின் மீது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
Also Read : 2025ல் வீட்டிலிருந்தே மாதம் ₹10,000 சம்பாதிக்க 7 சிறந்த வழிகள்
இந்நிலையில், இப்படத்தை இயக்கும் ஆர்.ஜே. பாலாஜி, தனது எக்ஸ் (முந்தைய ட்விட்டர்) பக்கத்தில் ஒரு முக்கியமான அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதாவது, “கருப்பு” படத்திற்கான முக்கியமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என பதிவிட்டுள்ளார்.
இந்த அப்டேட், டீசர் வெளியீடாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சமீபத்திய ஒரு பேட்டியில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர், “கருப்பு” படத்தின் டீசர் சூர்யாவின் பிறந்த நாள் ஆகும் ஜூலை 23ஆம் தேதி வெளியாகும் என உறுதியாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

