இன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு தளம் என்றால் அது Instagram தான். புகைப்படம், வீடியோ, Reels, Story போன்றவற்றின் மூலம் இளைஞர்களை அதிகம் ஈர்த்து வரும் இந்த தளத்தில் தற்போது விரைவில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளும் வளர்ந்துள்ளன.
அதிலும் ஒரு நாளைக்கு ரூ.1000 முதல் ₹10,000 வரையிலும் சம்பாதிக்கும் பயனர்கள் பலர் இருக்கிறார்கள்.
இன்ஸ்டாகிராம் எப்படி பணம் தரும்?
Instagram தானாகவே யாருக்கும் பணம் கொடுக்காது. ஆனால் அதிலிருந்து பணம் சம்பாதிக்க கீழ்க்கண்ட வாய்ப்புகள் இருக்கின்றன:
1. Influencer Marketing
ஒரு கணக்கில் அதிகமான followers இருந்தால், சிறிய நிறுவனங்கள் முதல் பிரபல பிராண்டுகள் வரை விளம்பரங்கள் போட தயாராக இருக்கிறார்கள்.
உதாரணம்:
உங்கள் கணக்கில் 50K followers இருந்தால், ஒரு Story போட ₹1000 – ₹3000,
ஒரு Reel போட ₹3000 – ₹8000 வரை பெறலாம்.
2. Affiliate Marketing
Amazon, Flipkart, Meesho போன்ற நிறுவனங்கள் Affiliate link கொடுப்பதன் மூலம் நீங்கள் product பற்றி வீடியோ போடலாம். யார் அந்த லிங்கில் கிளிக் செய்து வாங்கினாலும், உங்களுக்கு கமிஷன் கிடைக்கும்.
3. Own Product Sales
நீங்கள் சோப்பு, டிப்ஸ், வெள்ளி உலோகங்கள், புடவை, arts போன்றவற்றை தயாரித்து இருப்பீர்கள் என்றால், Insta-வில் அதை விற்பனை செய்யலாம்.
ஒரு நாளைக்கு 5 ஆட்கள் ₹500-₹1000 விலை பொருள் வாங்கினால் ₹5000 வருமானம் சாத்தியம்.
4. Paid Promotions for Others
மற்ற pages-க்கு follower சேர்த்துக் கொடுக்க ₹100 – ₹500 வரை ஒரு Post க்கு கேட்கலாம்.
5. Course Sales / Digital Products
நீங்கள் Digital Marketing, Drawing, Cooking போன்றவற்றில் ஒரு course வைத்திருப்பீர்கள் என்றால், Reels & Story மூலம் அதை விளம்பரப்படுத்தி விற்பனை செய்யலாம்.

இன்ஸ்டாகிராம் வருமானம் பெற என்ன தேவை?
1. Quality Content
உங்கள் வீடியோக்கள் யாருக்கு பயனாக இருக்கும்? என்பது முக்கியம். Example:
- Beauty tips
- Tech unboxing
- Motivation
- Small business ideas
- Cooking recipes
2. Regular Posting
வாரத்திற்கு குறைந்தது 4–5 post / reels போட வேண்டும். Consistency முக்கியம்.
3. Engagement
Followers-ஐ உங்கள் Content-ல் ஈர்க்குங்கள். அதாவது comments, shares, DMs அதிகமா வரணும்.
4. Niche Selection
நீங்கள் எந்த வகை விஷயங்களைப் பற்றி பேசப்போகிறீர்கள்?
Fashion, Health, Tech, Food, Motivation, Education — இந்தவகையில் தேர்வு செய்யுங்கள்.
Also Read உங்கள் வணிகத்திற்கு இலவசமாக வாட்ஸ்அப் விளம்பரம் செய்வது எப்படி?
ஒரு நாளில் சம்பாதிக்க முடிகிறதா?
ஆம். ஆனால் எல்லாருக்கும் அல்ல.
Followers, Content reach, Niche, Engagement எல்லாம் பொருந்தும்போதுதான் இந்த வாய்ப்பு கிடைக்கும்.
Average Calculation Example (Micro Influencer):
- 10K Followers
- 1 Paid Reel – ₹2000
- 2 Affiliate Orders – ₹500
- 1 Product Sale – ₹1000
Total = ₹3500 in 1 day
Top Influencers எப்படி சம்பாதிக்கிறார்கள்?
- ஒரு Sponsored Post = ₹20,000 வரை (Followers > 1 Lakh)
- Daily Affiliate Sales = ₹1000+
- Digital Course Sales = ₹5000+ per day
- Brand Collaboration = ₹50,000 / month
ஆரம்பிக்க எப்படி?
1. ஒரு நல்ல Bio & Profile Picture வைக்கவும்
2. Content Plan தயாரிக்கவும்
3. Hashtags & Timing Follow செய்யவும்
4. Reels, Story-ஐ அதிகம் பயன்படுத்தவும்
5. Trending sound, style-ஐ பயன்படுத்துங்கள்
எச்சரிக்கைகள்
- Fake followers வாங்க வேண்டாம்
- Copyright music, duplicate content போட வேண்டாம்
- Scam Affiliate link போட கூடாது
- Followers மட்டும் முக்கியம் இல்லை – Engagement முக்கியம்
முடிவு
இன்ஸ்டாகிராம் என்பது வெறும் பொழுதுபோக்காக இருந்தாலும், அதை நம்மால் பணமாக மாற்றும் திறமை இருந்தால் ஒரு நாளுக்கு ₹1000 முதல் ₹10000 வரையிலும் சம்பாதிக்க முடியும். ஆனால், முயற்சி, நேர்த்தி, திறமை மூன்றும் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.
இது ஒரு நாள் வேலை அல்ல. ஆனால் உங்கள் பிரபலமடைந்த பிறகு அதை முழு நேர பணியாகவும் மாற்றலாம்.

